விஜய் இன்ஸ்டாகிராமை ஃபாலோ செய்த முதல் திரையுலக பிரபலம் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,April 04 2023]

தளபதி விஜய் நேற்று இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு நாட்களில் 5.5 மில்லியன் ஃபாலோயர்கள் குவிந்துள்ளனர். இந்த நிலையில் விஜய் இன்ஸ்டாகிராம் பக்கம் ஆரம்பித்த அடுத்த நிமிடமே திரையுலக பிரபலம் ஒருவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை முதல் நபராக ஃபாலோ செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

முதல் நடிகர் விஜய் ஏற்கனவே பேஸ்புக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அக்கவுண்ட் வைத்திருக்கும் நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கினார். இதனை அடுத்து இணையதளங்கள் ஸ்தம்பித்தது என்பதும் ஒரு சில மணி நேரத்தில் லைக்ஸ், ஃபாலோயர்கள் குவிந்தனர் என்பதையும் பார்த்தோம்.



தமிழ் திரையுலக பிரபலங்கள் பெரும்பாலானோர் அவரது பக்கத்தை ஃபாலோ செய்வதாக அறிவித்தனர். இந்த நிலையில் விஜய் இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய ஒரு சில நொடிகளில் அந்த பக்கத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் ஃபாலோ செய்தார். அவர்தான் விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பாலோ செய்த முதல் நபர் என்றும் கூறப்படுகிறது.



நடிகர் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் ‘சர்கார்’, ‘பைரவா’ உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.