close
Choose your channels

இந்த சீசனின் முதல் ஓப்பன் நாமினேஷன்.. குறி வைக்கப்பட்ட பிக்பாஸ் பெண்  போட்டியாளர்..!

Monday, October 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த சீசனின் முதல் ஓப்பன் நாமினேஷன் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சீசனின் முதல் நாமினேஷன் இன்று நடைபெறும் என பிக் பாஸ் அறிவித்துள்ளதை அடுத்து விறுவிறுப்பாக நாமினேஷன் நடந்தது.

முதல்கட்டமாக பிரதீப்பை விஷ்ணு, வினிஷா மற்றும் விசித்ரா ஆகிய மூவரும் நாமினேட் செய்தனர். இதனை அடுத்து பூர்ணிமா, அக்சயா ஆகிய இருவரும் மணியை நாமினேட் செய்கின்றனர். ரவீனாவை மட்டுமே மணி என்டர்டைன்மென்ட் செய்வதில் கவனத்துடன் உள்ளார் என்ற குற்றச்சாட்டை அவர்கள் கூறுகின்றனர். இதனை அடுத்து மாயாவும் மணியை நாமினேட் செய்கிறார். அவர் ஒரு பிற்போக்கு வாதி என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

இதையடுத்து மாயா குறி வைக்கப்படுகிறார். மணி, பிரதீப் மற்றும் யுகேந்திரன் ஆகிய மூவருமே மாயாவை நாமினேட் செய்கின்றனர். மொத்தத்தில் மணி, மாயா மற்றும் பிரதீப் ஆகிய மூவரும் நாமினேஷன் சிக்கி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முழுமையான நாமினேஷன் குறித்த தகவல்களை விரைவில் பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment