இந்த சீசனின் முதல் ஓப்பன் நாமினேஷன்: யாருக்கு குறி?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில முறை ஓபன் நாமினேஷன் நடத்தப்படும் என்பதும் அப்போது நாமினேஷன் செய்பவர் நேரடியாகவே இரண்டு போட்டியாளர்களை அவர்கள் முன்னாடியே காரணங்களை கூறி நாமினேஷன் செய்வார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷன் இன்று நடைபெற்றுள்ளது. இந்த நாமினேசனில் தனலட்சுமியை நாமினேட் செய்யும் அசீம், ‘பெரியவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார் என்று கூறினார். மேலும் விக்ரமன் தனலட்சுமியை நாமினேட் செய்து ‘கேமை கேமாக மட்டும் பாருங்கள் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவு என போட வேண்டாம் என்று கூறினார்.

அதேபோல் அசீமை நாமினேட் செய்த ஷிவின், ‘சில சமயம் எல்லை தாண்டி போய் விடுகிறீர்கள் என்று கூறினார். அதேபோல செய்த தனிப்பட்ட முறையில் ஒருவரை அட்டாக் செய்வது மிகவும் தவறு என்று அசீமை நாமினேட் செய்த ஏடிகே கூறினார். அதேபோல அசீமை நாமினேட் செய்த தனலட்சுமி ஒவ்வொருவரும் தங்களின் கேம் எப்படி விளையாட வேண்டும் என்று பார்க்க வேண்டும் என்றும் இன்னொருவரை நோண்டி விட்டு அதன் மூலம் பலன் அடைய கூடாது என்று தனலட்சுமி கூறினார்.

இந்த புரமோ வீடியோவில் இருந்து அசீம் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த வாரத்தின் முழுமையான நாமினேஷன் பட்டியலில் உள்ளவர்கள் யார் யார் என்பதை இன்றைய நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்வோம்.

More News

கார், டிவி, பிரிட்ஜ் எதுவும் வாங்காதீங்க…. அமேசான் நிறுவனரே கூறிய புதிய அறிவுரை!

உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பெசோஸ் கார், டிவி, பிரிட்ஜ், டிவி என எந்த அத்யாவசியப் பொருள்

பெண் குழந்தையை தத்தெடுத்த நடிகை ரோஜா.. இன்று அவர் என்ன செய்கிறார் தெரியுமா?

 நடிகை ரோஜா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறுமியை தத்தெடுத்த நிலையில் இன்று அந்த சிறுமி மருத்துவம் படிப்பதற்காக கல்லூரியில் சேர்ந்து உள்ளார்.

ராபர்ட் உடன் காதலை முறித்து கொண்டாரா நிஜ காதலி?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டர், பிக்பாஸ் வீட்டிற்குள் ரக்சிதாவை சுற்றி சுற்றி வந்து ஒருதலையாக காதலித்து வரும் நிலையில் அவரது நிஜ காதலி அவருடனான

புற்று நோயில் இருந்து மீண்ட பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

இரண்டு முறை புற்று நோயிலிருந்து மீண்ட பிரபல நடிகை ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மாரி செல்வராஜின் 'வாழை': படப்பிடிப்பை தொடங்கி வைத்த உதயநிதி எம்.எல்.ஏ

Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது.