இந்த சீசனின் முதல் ஓப்பன் நாமினேஷன்: யாருக்கு குறி?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில முறை ஓபன் நாமினேஷன் நடத்தப்படும் என்பதும் அப்போது நாமினேஷன் செய்பவர் நேரடியாகவே இரண்டு போட்டியாளர்களை அவர்கள் முன்னாடியே காரணங்களை கூறி நாமினேஷன் செய்வார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷன் இன்று நடைபெற்றுள்ளது. இந்த நாமினேசனில் தனலட்சுமியை நாமினேட் செய்யும் அசீம், ‘பெரியவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார் என்று கூறினார். மேலும் விக்ரமன் தனலட்சுமியை நாமினேட் செய்து ‘கேமை கேமாக மட்டும் பாருங்கள் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவு என போட வேண்டாம் என்று கூறினார்.

அதேபோல் அசீமை நாமினேட் செய்த ஷிவின், ‘சில சமயம் எல்லை தாண்டி போய் விடுகிறீர்கள் என்று கூறினார். அதேபோல செய்த தனிப்பட்ட முறையில் ஒருவரை அட்டாக் செய்வது மிகவும் தவறு என்று அசீமை நாமினேட் செய்த ஏடிகே கூறினார். அதேபோல அசீமை நாமினேட் செய்த தனலட்சுமி ஒவ்வொருவரும் தங்களின் கேம் எப்படி விளையாட வேண்டும் என்று பார்க்க வேண்டும் என்றும் இன்னொருவரை நோண்டி விட்டு அதன் மூலம் பலன் அடைய கூடாது என்று தனலட்சுமி கூறினார்.

இந்த புரமோ வீடியோவில் இருந்து அசீம் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த வாரத்தின் முழுமையான நாமினேஷன் பட்டியலில் உள்ளவர்கள் யார் யார் என்பதை இன்றைய நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்வோம்.