'தளபதி 64' படத்தின் முதல் அதிகாரபூர்வ தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் ஓப்பனிங் வசூல் இதுவரை இல்லாத சாதனை ஏற்படுத்துமென தெரிகிறது
இந்த நிலையில் விஜய்யின் அடுத்த திரைப்படமான 'தளபதி 64' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் முதல் வரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இந்த படம் குறித்த அறிவிப்புகள் தொடர்ச்சியாக இன்று முதல் மூன்று நாட்கள் வெளியாகவிருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம் அதன்படி சற்று முன் வெளியாகிய இந்த படத்தின் தகவலின்படி இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்திருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. அதேபோல் இசையமைப்பாளராக அனிருத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளார்.
'தளபதி 64' படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது இதுவரை தகவலாக மட்டுமே இருந்த நிலையில் தற்போது அது அதிகாரபூர்வ தகவல் ஆகியுள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே உச்சத்திற்கு சென்றுள்ளது
We are overwhelmed and excited to have our versatile star, '#MakkalSelvan’ @VijaySethuOffl sir on board for #Thalapathy64 ?? #VJSjoinsThalapathy64 #Summer2020@actorvijay @Dir_Lokesh @anirudhofficial @SonyMusicSouth pic.twitter.com/JyFFosIVbj
— XB Film Creators (@XBFilmCreators) September 30, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com