பிறந்த நாளில் பிரபல நடிகைக்கு மிஷ்கின் கொடுத்த இன்ப அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த ’பிசாசு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது 6 வருடங்கள் கழித்து ‘பிசாசு 2’ படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
’பிசாசு’ முதல்பாகத்தில் பிரயாகா மார்டின் பிசாசாக நடித்த நிலையில் தற்போது ‘பிசாசு 2’ படத்தில் பூர்ணா பிசாசாக நடிக்க உள்ளார் என்றும், மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று ஆண்ட்ரியா தனது பிறந்த நாளை கொண்டாடுவதை அடுத்தது ‘பிசாசு 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது என்பதும், இதில் ஆண்ட்ரியாவின் அட்டகாசமான தோற்றம் காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்பதும் இதில் ஒரு பாடலை சூப்பர் சிங்கர் டைட்டில் பட்டம் பெற்ற பிரியங்கா பாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Let’s light the candle and celebrate the special day of our protagonist Andrea. @andrea_jeremiah
— Mysskin (@DirectorMysskin) December 20, 2020
Happy birthday and wishing you a long creative life.
-Mysskin #pisasu2@Lv_Sri @Rockfortent @kbsriram16 @PRO_Priya pic.twitter.com/8N366Hs2gD
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com