பிக்பாஸ் 2: முதல் தலைவரான ஜனனி, ஏமாற்றத்தில் மும்தாஜ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைவர் தேர்வு செய்யப்பட்டு அவருடைய அறிவுரையின்படி போட்டியாளர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பது விதி. இந்த நிலையில் பிக்பாஸ் 2 முதல் தலைவரை தேர்வு செய்ய மூன்று கவர்கள் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டது. இந்த கவர்களை தேடி கண்டுபிடிப்பவர்களே தலைவர் போட்டிக்கு நிற்க முடியும் என்றும் கூறப்பட்டது.
இதனையடுத்து கவர்களை தேடும் முயற்சியில் போட்டியாளர்கள் ஈடுபட்டனர். முதலில் மகத் ஒரு கவரையும் இரண்டாவது ஜனனி ஐயர் ஒரு கவரையும் கண்டுபிடிக்க மூன்றாவது கவரை கண்டுபிடிக்கும்போது மும்தாஜூக்கும் செண்ட்ராயனுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது கவரை மும்தாஜ் கண்டுபிடிக்க அவரும் தலைவர் பதவிக்குரிய வேட்பாளராக மாறினார்
இந்த நிலையில் மூவரும் தங்களை தலைவராக தேர்வு செய்ய பிரச்சாரம் செய்தனர். இதில் மும்தாஜ், தலைவருக்கான மெச்சூரிட்டி ஜனனி, மகத்திடம் இல்லை என்றும் தன்னை தேர்வு செய்தால் அனைவருக்கும் ஒத்துழைக்கும் வகையில் இருப்பேன் என்றும் கூறி பிரச்சாரம் செய்தார்
ஆனால் வாக்குகளின் அடிப்படையில் ஜனனி ஐயர் முதல் தலைவராக தேர்வு பெற்றார். இதனால் மும்தாஜ் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. ஆரம்பம் முதலே மும்தாஜ் நாட்டாண்மை போக்குடன் இருப்பதாக போட்டியாளர்கள் பிக்பாஸிடம் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் முதல் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜனனிக்கு மும்தாஜ் ஒத்துழைப்பு கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments