இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவ கல்லூரி மாணவி இவர்தான்
Send us your feedback to audioarticles@vaarta.com
மூன்றாம் பாலினத்தவர்களாகிய திருநங்கைகள் தற்போது ஒவ்வொரு துறையிலும் முன்னேறி வரும் நிலையில் இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவக்கல்லூரி மாணவி என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த தாரிகாபானு என்பவர் பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவர் தற்போது திருவள்ளுவர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். பலவித போராட்டங்களுக்கு பின்னரே இவர் 12ஆம் வகுப்பில் அனுமதிக்கப்பட்டு தேர்வு எழுதினார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதை அடுத்து தற்போது இவருக்கு சித்தமருத்துவம் படிக்க நீதிமன்றத்தின் உத்தரவின்படி சீட் கிடைத்துள்ளது. இதனால் இந்தியாவின் முதல் மருத்துவக்கல்லூரி மாணவி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மேலும் அனைத்து கல்வி நிறுவனங்களும் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout