கொரோனாவால் பலியான முதல் இந்தியர்: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Wednesday,March 11 2020]
உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ் சமீபத்தில் இந்தியாவிற்குள் நுழைந்தது என்பது தெரிந்ததே. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளால் தான் இந்த நோய் பரவி வருகிறது என்பதால் அனைத்து விமான நிலையங்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு மருத்துவர் குழுவினர் விமான பயணிகளை பரிசோதனை செய்து வருகின்றனர். இதையும் மீறி ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.
இந்தியாவில் தற்போது 60 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த 76 வயது முகமது உசேன் சித்திக் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் கொரோனாவால் பலியாகியுள்ளார். இதனையடுத்து கொரோனாவால் பலியான முதல் இந்தியர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்து வரும் கொரோனா, இந்தியாவிலும் ஒரு உயிரை பறித்து உள்ளதால் இந்திய மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.