கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட முதல் நடிகை: ரஜினி பட நடிகைக்கு குவியும் வாழ்த்து!

  • IndiaGlitz, [Sunday,January 10 2021]

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட தற்போது இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் நடிகை என்ற பெருமையை ரஜினி படத்தில் நடித்த நடிகை ஒருவர் தட்டிக் கொண்டு சென்றுள்ளார்

ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்பட பலர் நடித்த ’ஹம்’ என்ற திரைப்படத்தில் நடித்தவர் நடிகை ஷில்பா ஷிரோட்கர். இவர் கடந்த 90களில் பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்தவர் என்பதும் தற்போது இவர் கணவர் மற்றும் குழந்தைகளுடன் துபாயில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் துபாயில் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தானும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாகவும், அதற்காக துபாய் அரசுக்கு நன்றி என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

இதுவரை வெளிவந்த செய்திகளின்படி எந்த இந்திய நடிகையும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரியவில்லை. எனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் நடிகை என்ற பெருமையை இவர் பெறுகிறார் என்பதும், இதனைஅடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

தமிழ் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி டெல்லி மாடல் அழகிகளை ஏமாற்றிய கும்பல்!

தமிழ் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட 2 மாடல் அழகிகள் சென்னையில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கமல் கேள்விக்கு பதில் சொல்ல மறுக்கும் ஆரி உள்பட 4 போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை கமல் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு உடனடியாக பதில் சொல்லும் போட்டியாளர்கள் இன்று அவர் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருப்பது

திடீர் திருமணத்திற்கு காரணம் என்ன? மனம் திறந்த ஆனந்தி!

பிரபுசாலமன் இயக்கிய 'கயல்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் 'சண்டிவீரன்' 'பொறியாளன்' 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' 'விசாரணை' 'பரியேறும் பெருமாள்'

சீரியல் நடிகையின் புதிய போட்டோஷூட்! இணையத்தில் வைரல்!

கமலஹாசனின் 'தேவர்மகன்', சேரனின் 'பாண்டவர் பூமி' உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் அதன் பின்னர் 'மொழி' 'சந்தோஷ் சுப்பிரமணியம்' 'வாலிபராஜா' 'மன்னார் வகையறா' 'கஜினிகாந்த்'

பிறந்த நாளில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த பட டைட்டில்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சிவகார்த்திகேயனின் 'கனா' படத்திற்கு பிறகு நாயகிக்கு