பாலாஜி-நித்யா மோதல்: பிக்பாஸ் வீட்டில் நடந்த முதல் சண்டை

  • IndiaGlitz, [Wednesday,June 20 2018]

பிக்பாஸ் வீட்டில் எப்போது முட்டல் மோதல் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று அந்த சண்டையை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்றுமுன் வெளியான பிக்பாஸ் புரமோ வீடியோவில் பொறியலில் வெங்காயம் போட வேண்டும் என்று பாலாஜி கூற அதற்கு அவருடைய மனைவி நித்யா முதலில் பதில் சொல்லாமல் பேசாமல் இருந்தார். பின்னர் மும்தாஜ் 'பதில் கூறுங்கள்' என்று சொன்ன பின்னர் 'வெங்காயம் தேவையில்லை' என்று நித்யா கூற இதனால் மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலை பிக்பாஸ் வீட்டின் தலைவர் அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருக்கின்றார்.

உங்க ரெண்டு பேர்களின் பர்சனல் கோபங்களை இங்கு காட்டி கொள்ள வேண்டாம் என்றும், இதனால் மற்றவர்களுக்கு பிரச்சனையாக இருக்கும் என்றும் நித்யாவை அமைதிப்படுத்துகிறார் மும்தாஜ். இந்த விவகாரம் பிக்பாஸ் வீட்டை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. பாலாஜிக்கும் நித்யாவுக்கும் இடையே ஏற்கனவே பிரச்சனைகள் ஏற்பட்டு அது போலீஸ் வரை சென்றுள்ள நிலையில் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியினால் ஒன்றுசேருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உண்மை நிலை அதற்கு மாறாக உள்ளது.

இந்த நிலையில் டேனி, 'பிக்பாஸ், இந்த வீட்டில் இன்று சண்டை நடந்துள்ளதால் எங்களுக்கு சோறு இல்லை என்றும், அதனால் ஓட்டலில் இருந்து எனக்கு சாப்பாடு வாங்கி தாருங்கள், நான் பணம் கொடுத்துவிடுகிறேன்' என்றும் கடி ஜோக் அடித்து வெறுப்பேற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

மிஸ் இந்தியா பட்டம் வென்ற சென்னை கல்லூரி மாணவி

ஒவ்வொரு ஆண்டும் மிஸ் இந்தியா போட்டி சிறப்பாக நடந்து வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான மிஸ் இந்தியா போட்டி நேற்று இரவு மும்பையில் நடைபெற்றது

பிக்பாஸின் முதல் லக்சரி டாஸ்க்: சிக்கலான கேள்விகளும் நேர்மையான பதில்களும்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் லக்சரி டாஸ்க் ஆக ஒவ்வொருவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படும் என்றும் அதற்கு நேர்மையாக பதில் சொல்ல வேண்டும்

சிவி குமாரின் அடுத்த பட டைட்டில் வெளியீடு

'அட்டக்கத்தி', 'பீட்சா', 'சூது கவ்வும்' உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சிவி குமார் இயக்கிய 'மாயாவன்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அமெரிக்காவில் தெலுங்கு நடிகைகள் விபச்சாரம்: தமிழ் நடிகைக்கு ஏற்பட்ட சிக்கல்

சமீபத்தில் தெலுங்கு இணை தயாரிப்பாளர் ஒருவர் தெலுங்கு நடிகைகளை அமெரிக்காவுக்கு அழைத்து சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும்,

'காலா'வை விட 'மெர்சல்' தான் சிறந்த படம்: எஸ்.ஏ.சி கருத்துக்கு நெட்டிசன்கள் ரியாக்சன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிவருகிறது.