வந்த அடுத்த நாளே வெளியேறும் போட்டியாளர்.. இன்று எலிமினேஷன் ஆவது யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில், இன்று ஒருவர் எலிமினேஷன் ஆகப் போவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக தொடங்கிய நிலையில், விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார் என்பதும், 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை, முதல் வாரம் எலிமினேஷன் இருக்காது என்றும், இரண்டாவது வாரம் தான் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் எலிமினேஷன் செய்யப்படுவார் என்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று தான் தொடங்கிய நிலையில், இன்று ஒருவர் எலிமினேஷன் செய்யப் போவதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய எபிசோடின் முடிவில், விஜய் சேதுபதி இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு, பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக போட்டியாளர் ஒருவர் 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட உள்ளார் என்று அறிவித்துள்ளார். நேற்று நுழைந்த 18 போட்டியாளர்களில் இன்று யார் வெளியேறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#BiggBossTamil8 Promo 1 ( Day 1 ) 🤯#BiggBossTamil8 #BiggBossTamil #பிக்பாஸ் #BiggBoss #BiggBoss8 #BiggBoss8Tamil #VijaySethupathi #BiggBossTamilSeason8 pic.twitter.com/g4IUjs8l6k
— BBTamilNadu (@BBTamilNadu) October 7, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com