கமல் கட்சியின் முதல் விசில் இதுதான்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் விசில் என்ற செயலியை அறிமுகம் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த விசில் செயலியை டவுன்லோடு செய்பவர்கள் சமூகத்தில் நடக்கும் தவறுகள், ஊழல்கள் ஆகியவற்றை அறிந்தால் உடனே அதில் பதிவு செய்யலாம் என்றும், அந்த புகார்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்றும் கூறியிருந்தார். இந்த முயற்சி ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவலின்படி இந்த விசில் செயலியை ஏராளமானோர் தங்கள் மொபைல் போன்களில் இன்ஸ்டால் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விசில் செயலியில் நேற்று முதல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரில் சென்னை அருகே உள்ள அனகாபுத்தூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர், அங்கிருக்கும் ஆற்றில் கலந்து நீர் மாசு ஏற்படுத்துகிறது என்று மய்யம் விசில் செயலியில் ஒருவர் பதிவு செய்துள்ளார். இந்த புகார் சம்பந்தப்பட்ட துறைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: மக்கள் நீதி மய்யம் பெருமளவு வேலை வாய்ப்புகள் வழங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு எதிரானது அல்ல. ஆனால் வணிகம் மற்றும் வேலை வாய்ப்பின் பெயரில் நிகழும் கொடுமையான மாசுகளுக்கு எதிரானது. அரசு இது போன்ற பொறுப்பற்ற மாசுக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும். அனகாபுத்தூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை தேவை! தொழில்கள் மெல்லச் சாகக்கூடாது... மக்களும் தான்' என்று கமல் கூறியுள்ளார். விசில் செயலியில் புகார் பதிவாக தொடங்கியதை அடுத்து இன்னும் பல புகார்கள் பதிவு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments