கமல் கட்சியின் முதல் விசில் இதுதான்

  • IndiaGlitz, [Friday,May 04 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் விசில் என்ற செயலியை அறிமுகம் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த விசில் செயலியை டவுன்லோடு செய்பவர்கள் சமூகத்தில் நடக்கும் தவறுகள், ஊழல்கள் ஆகியவற்றை அறிந்தால் உடனே அதில் பதிவு செய்யலாம் என்றும், அந்த புகார்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்றும் கூறியிருந்தார். இந்த முயற்சி ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவலின்படி இந்த விசில் செயலியை ஏராளமானோர் தங்கள் மொபைல் போன்களில் இன்ஸ்டால் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விசில் செயலியில் நேற்று முதல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரில் சென்னை அருகே உள்ள அனகாபுத்தூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர், அங்கிருக்கும் ஆற்றில் கலந்து நீர் மாசு ஏற்படுத்துகிறது என்று மய்யம் விசில் செயலியில் ஒருவர் பதிவு செய்துள்ளார். இந்த புகார் சம்பந்தப்பட்ட துறைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: மக்கள் நீதி மய்யம் பெருமளவு வேலை வாய்ப்புகள் வழங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு எதிரானது அல்ல. ஆனால் வணிகம் மற்றும் வேலை வாய்ப்பின் பெயரில் நிகழும் கொடுமையான மாசுகளுக்கு எதிரானது. அரசு இது போன்ற பொறுப்பற்ற மாசுக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும். அனகாபுத்தூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை தேவை! தொழில்கள் மெல்லச் சாகக்கூடாது... மக்களும் தான்' என்று கமல் கூறியுள்ளார். விசில் செயலியில் புகார் பதிவாக தொடங்கியதை அடுத்து இன்னும் பல புகார்கள் பதிவு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

More News

தேசிய விருது புறக்கணிப்பு குறித்து பாரதிராஜா

சமீபத்தில் திரைப்பட கலைஞர்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த ஆண்டு தமிழ் படங்களுக்கு வெறும் நான்கே விருதுகள் மட்டுமே கிடைத்தது.

விவாகரத்து ஆன மனைவியுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகர்?

பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், சூசன் என்பவரை கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ரிஹான், ரிதான் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

அஜித் உதவி செய்தாரா? இல்லையா? மாறுபட்ட கருத்துக்களால் குழப்பம்

அஜித் யாருக்கும் தெரியாமல் செய்த உதவிகள் பல என்றும், அந்த உதவிகள் ஒருசில ஆண்டுகள் கழித்து உதவி பெற்றவர்களே கூறும்போதுதான் அது வெளியுலகிற்கு தெரிய வரும் என்றும் கூறப்படுவதுண்டு.

மே தினத்தில் தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தல தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி, மைதானத்தில் பேட்ஸ்மேனாக ஆக்ரோஷமாகவும், கேப்டனாக கூலாகவும் செயல்படுவதால் தான் அவருக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்து வருகிறது.

வைரலாகும் பாடகியின் பிகினி புகைப்படம்

அஜித் நடித்த 'பில்லா' படத்தில் இடம்பெற்ற 'செய் ஏதாவது செய்', யோகி' படத்தில் இடம்பெற்ற 'யோகி யோகிதான்' உள்பட பல தமிழ்,  தெலுங்கு, இந்தி பாடல்களை பாடிய பாடகி நேஹா பாசின்.