கடற்கரை டூ கடற்கரை: சென்னையில் முதல் சுற்றுவட்ட ரயில் சேவை தொடக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரைக்கு செல்லும் சுற்றுவட்ட ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கோரிக்கையை அரக்கோணம் பகுதி ரயில் பயணிகள் கடந்த இருபது ஆண்டுகளாக விடுத்து வந்த நிலையில் இன்று அவர்களின் கனவு நனவாகியுள்ளது
சென்னை கடற்கரையில் இருந்து கிளம்பும் இந்த சுற்றுவட்ட ரயில் திருவள்ளூர் வழியாக அரக்கோணம் வந்து பின்னர் அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரைக்கு செல்லும்
இதுவரை அரக்கோணத்தில் இருந்து தாம்பரம் செல்லும் பயணிகள் சென்ட்ரல் வந்து அதன்பின்னர் தாம்பரம் வரவேண்டிய நிலை இருந்தது. இதற்கு 4 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். ஆனால் இனி அரக்கோணத்தில் இருந்து தாம்பரத்திற்கு இந்த சுற்றுவட்ட ரயில் மூலம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக இரண்டே மணி நேரத்தில் தாம்பரத்திற்கு பயணம் செய்துவிடலாம். இதனால் பயண நேரமும் பயணக்கட்டணமும் மிஞ்சும். இந்த சுற்றுவட்ட ரயில்களை காலை, மாலை வேளைகளை அதிகளவில் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com