இந்தியா - பப்புவா நியூ கினியா இணையும் படத்தை தயாரிக்கும் பா ரஞ்சித்.. டைட்டில் -ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
முதல் முறையாக இந்தியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய இரு நாடுகளின் திரையுலகில் இணையும் படத்தை பா ரஞ்சித் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பா.ரஞ்சித் தற்போது ’தங்கலான்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் அவர் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சில படங்களை தயாரித்து வருகிறார் என்றும் அவ்வப்போது இந்த படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி வருவது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் தற்போது முதல் முறையாக இந்தியா மற்றும் பப்புவா நியூ கினியா திரை உலகம் இணைந்து தயாரிக்கும் படத்தை நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிலிக்கான் மீடியா மற்றும் NAFA புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் பிரபல பெங்காலி நடிகை ரீட்டா பாரி சக்கரவர்த்தி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் மேலும் பிரகாஷ்பேர் என்பவர் என்ற நடிகரும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், ரிக்கி கேஜ் என்பவர் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிஜு இயக்க இருக்கும் இந்த படத்திற்கு ’Papa Buka’என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதோடு டைட்டிலுடன் கூடிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Happy to present to you #PapaBuka - The first cinematic collaboration between Papua New Guinea and India.
— pa.ranjith (@beemji) May 15, 2024
A film by @drbijufilmmaker starring @ritabharipc @prakashbare and the original score composed by @rickykej
Delighted to have @officialneelam partner with SILICON MEDIA… pic.twitter.com/wvGI14m3UU
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments