முதல்முறையாக 3Dயில் உருவாகும் அடல்ட் காமெடி படத்தில் யோகிபாபு
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் முதல்முறையாக 3D கேமிராவில் உருவாக்கப்பட்ட இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்ற நிலையில் யோகிபாபு நடிக்கவுள்ள அடுத்த படம் முதல்முறையாக 3Dயில் உருவாகும் அடல்ட் காமெடி படம் என்ற பெருமையை பெறவுள்ளது.
இந்த படத்தை இயக்கும் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டதாரியான அறிமுக இயக்குனர் விநாயக் சிவா இந்த படம் குறித்து கூறியபோது, '"இந்த படத்தை நான் 'அடல்ட் ஹாரர் காமெடி' என்று குறிப்பிடுவதை விட 'குறும்பு' வகையாக படம் என சொல்வேன். அதை நியாயப்படுத்தும் வகையிலான ஒரு சரியான கதை இருக்கிறது. ஸ்கிரிப்ட் எழுதும்போது நான் கவனத்தில் வைத்திருந்த முக்கிய விஷயம், யாரையும் காயப்படுத்தவோ அல்லது இழிவுபடுத்தவோ கூடாது என்பது தான். வேடிக்கையான மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அச்சமூட்டும் விஷயங்களும் படத்தில் இருக்கும். மேலும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் 3D மூலம் திகிலான மற்றும் பயமுறுத்தும் புதிய அனுபவத்தை வழங்குவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம்"
மேலும் சில பிரபல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூடிய வரைவில் அது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இப்போதைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபுவை ஒப்பந்தம் செய்திருக்கிறோம். யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோரும் அவருடன் இணைந்து நடிக்கிறார்கள்" என்று கூறினார்
மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் பணியாற்றிய பிரபலமான தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர் பணியாற்ற உள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதத்தின் மத்தியில் படப்பிடிப்பு துவங்கப்பட இருப்பதாகவும் இயக்குனர் விநாயக் சிவா தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments