முக.ஸ்டாலின் கையெழுத்திடும் முதல் 3 அம்சங்கள் ..! முதல்வர் பராக்...!

நாளை முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் முக.ஸ்டாலின், முதலாக கையெழுத்திடப்போகும் முக்கிய 3 கோப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 159 தொகுதிகளில் வெற்றிபெற்று, ஆட்சியமைக்கவுள்ளது. நாளை முதல்வராக பதவியேற்க இருக்கும்  திமுக தலைவர் முக.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் அமைச்சரவை பட்டியலை வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து  ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின், கையெழுத்திடப்போகும் முக்கிய கோப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆட்சிக்கு வந்தால் தாங்கள் செயல்படுத்தக்கூடிய திட்டங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தார் ஸ்டாலின்.

இந்நிலையில் நாளை பதவியேற்கும் முன்பு ஸ்டாலின் அவர்கள், கருணாநிதி, பெரியார் மற்றும் அண்ணா நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு, கோட்டைக்கு செல்லவிருக்கிறார். முதல்வர்  இருக்கையில் அமர்ந்ததும் முக்கியமான 3 கோப்புகளில் கையெழுத்திடவுள்ளார் முக.ஸ்டாலின். அவை பின்வருமாறு,

1. முதலாக கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு, ரூ.4000 வழங்கும் திட்டத்தில் கையெழுத்திடுவார்.

2. தமிழகத்தில் உள்ள அனைத்து நகரப்பேருந்துகளிலும், பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.

3.மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள பெண்களுக்கு திருமண உதவித்தொகை தரப்பட்டுவருகிறது. அப்படி வழங்கப்படும் உதவித்தொகை ரூ.25,000-ஐ, ரூ.30,000 -மாக உயர்த்தி, அத்துடன் 8 கிராம் தங்கம் தாலியும் வழங்கப்படும்.

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அல்லது வழிபாட்டுத்தலங்களை சீரமைக்க நிதி அல்லது பேறுகால உதவித்தொகை உயர்வு

உள்ளிட்ட மூன்று முக்கிய திட்டங்களில் முதல்வர் முக.ஸ்டாலின் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.