மனைவியை பழிவாங்க நாய் கூட்டில் குழந்தையை அடைத்து சித்திரவதை செய்த தந்தை!

  • IndiaGlitz, [Monday,April 22 2019]

சீனாவை சேர்ந்த ஒருவர், விவாகரத்து பெற்று சென்ற மனைவியை பழிவாங்க, தன்னுடைய 20 மாத குழந்தையை பல்வேறு வகையில் துன்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து போலீசார் தற்போது அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

சீனாவில் காய்டாங் பகுதியை சேர்ந்த ஒருவர், தன்னுடைய மனைவியிடம் இருந்து, கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளார். இருவருக்கும் பிறந்த ஆண் குழந்தையை, மனைவியிடம் கொடுக்காமல் தானே வளர்ப்பதாக ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், தற்போது மனைவி மேல் உள்ள கோபத்தை தீர்த்துக் கொள்ள மகனை பல்வேறு வழிகளில் துன்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் 20 மாத பிஞ்சி குழந்தையை, நாய் அடைத்து வைக்கும் இரும்பு கூட்டிற்குள் வைத்து பூட்டி அதனை புகைப்படமாக எடுத்து, விவாகரத்து பெற்று சென்ற மனைவிக்கு அனுப்பியுள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரின் முன்னாள் மனைவி உடனடியாக போலீசில் புகார் கொடுத்தார் தற்போது போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஆண்டு தான் இந்த தம்பதிக்கு விவாகரத்து ஆகியுள்ளது. மனைவி மீது உள்ள வெறுப்பில், இவர் குழந்தையை அடித்து, இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டு, மனைவி மேல் உள்ள ஆத்திரத்தை தீர்த்துவருவதாக கூறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார், இவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். குழந்தை தற்போது தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.