என் மகனுடன் டேட்டிங் போறியா? அனு இமானுவேலிடம் கேள்வி கேட்ட ஹீரோவின் தந்தை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு திரையுலகில் நடிகைகளில் ஒருவரான அனு இமானுவேலிடம் பிரபல நடிகரின் தந்தை ’என் மகனை காதலிக்கிறாயா? அவருடன் டேட்டிங் செல்கிறாயா? என்று கேட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி அதன் பின்னர் பிரபல நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அனு இமானுவேல். இவர் தமிழில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன்’ சிவகார்த்திகேயன் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’ ஆகிய படங்களிலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அனு இமானுவேல் நடித்து வரும் தெலுங்கு படங்களில் ஒன்று ’ஊர்வசிவோ ராக்ஷசிவோ’ என்ற படம் என்பதும் இந்த படத்தில் அவர் அல்லு சிரிஷ் உடன் ஜோடியாக நடித்து வருகிறார் என்பது பலர் அறிந்ததே.
இந்த நிலையில் அல்லு சிரிஷ் மற்றும் அனு இமானுவேல் ஆகிய இருவரும் காபி ஷாப்பில் இருந்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வந்ததை அடுத்து இருவரும் காதலிப்பதாகவும் டேட்டிங் செய்து கொண்டு இருப்பதாகவும் வதந்தி பரவியது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அனு இமானுவேல், ‘நான் ’ஊர்வசிவோ ராக்ஷசிவோ’ படத்தில் நடிப்பதற்கும் முன் அல்லு சிரிஷை இரண்டு முறை தான் சந்தித்துள்ளேன் என்றும் இந்த படத்தின் கதாபாத்திரம் பற்றி டிஸ்கஸ் செய்வதற்காக காபி ஷாப்பில் சந்தித்தோம் என்றும் அந்த போட்டோக்களை இணையத்தில் வெளியானதால் நாங்கள் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவியது என்றும் கூறினார்.
இந்த வதந்தியை பார்த்து அல்லு சிரிஷின் தந்தை அல்லு அரவிந்த், ‘என் மகனுடன் டேட்டிங் செல்கிறாயா? எனக் கிண்டலாக கேட்டார் என்றும், இந்த வதந்தி குறித்து நாங்கள் பலமுறை பேசி சிரித்திருக்கின்றோம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அல்லு சிரிஷ் மற்றும் இமானுவேல் காதல் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout