புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளைப் பாதிக்காது… விளக்கம் அளிக்கும் தமிழக அரசு!!!

 

மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேளாண் சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டு வந்தது. அதை எதிர்த்து பல எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தன. ஆனால் விவசாயிகளை பாதிக்கும் நோக்கத்தில் இந்தச் சட்டம் கொண்டு வரப்படவில்லை என மத்திய அரசு தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது.

இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு டெல்லியில் விவசாயிகள் கடந்த சில வாரங்களாக கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் புதிய வேளாண் சட்டத் திருத்தத்தைப் பற்றிய விளக்கத்தை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

முன்னதாக 1. விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம். 2. விவசாயிகள் விளைபொருட்கள் வாணிபம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம். 3. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.

இதில் நிறைவேற்றப்பட்ட விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த சட்டத்தை பொறுத்த வரை, தமிழகத்தில் கோகோ, கரும்பு, கோழிப் பண்ணை ஆகியவற்றில் நடைமுறையில் உள்ள பண்ணை ஒப்பந்த முறையை ஒழுங்குப்படுத்த இந்தச் சட்டம் வழிவகை செய்யும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. மேலும் 2019 ஆம் ஆண்டு கொண்டு வந்த தமிழ்நாடு வேளாண்மை விளைபொருட்கள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணை மற்றும் சேவைகள் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டத்தின் நோக்கங்களை உறுதிப்படுத்தும் விதமாகவும் இந்தச் சட்டம் அமைந்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

இதனால் விவசாயிகளை கட்டாயப்படுத்தும் அல்லது பாதிக்கும் ஷரத்துகள் ஏதும் இந்தச் சட்டத்தில் இல்லை எனவும் தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது. வாணிகம் மற்றும் வர்த்தகச் சட்டத்தைப் பொறுத்தவரை, வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் trade area என அறிவிக்கப்பட்ட எந்த இடத்திலும் விற்பனை செய்ய இச்சட்டம் அனுமதிப்பதால் விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு சுதந்திரம் கிடைக்கிறது.

இச்சட்டங்களால் குறைந்தபட்ச ஆதார விலையில் நடைபெறும் நெல் கொள்முதல்கள் பாதிக்காது. தொடர்ந்து அவை முறையாக நடைபெறும். உழவர் சந்தை திட்டம் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. பொது விநியோக திட்டத்தின்கீழ் விநியோகம் செய்ய விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் வேளாண் பொருட்கள் கொள்முதல் செய்வது தொடரும். மேலும் எதிர்பாராத திடீர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.

More News

ஒரு வருடமா கடலில் மிதந்த ரூ.600 கோடி மதிப்பிலான கொக்கைன்… பரபரப்பான கடத்தல் பின்னணி!!!

பசிபிக் தீவு அருகே உள்ள மார்ஷல் தீவு அருகே கடந்த செவ்வாய்கிழமை அன்று 649 கிலோ மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப் பட்டுள்ளது.

அனுமதி வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசியால் மீண்டும் பாதிப்பு… பதைக்க வைக்கும் தகவல்!!!

அமெரிக்காவின் பைஃசர் மற்றும் பயோன் டெக் நிறுவனங்கள் இரண்டும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த கடந்த 7 ஆம் தேதி பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியது.

நேற்று ஆரியிடம் கிண்டல், இன்று மன்னிப்பு: புரியாத புதிராக பாலாஜி!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி, ஒரு பெரும் புதிராகவே ஆரம்பத்தில் இருந்து காணப்படுகிறார்.

இதுவரை இல்லாத அளவிற்கு புது உச்சத்தைத் தொட்ட பிட்காயின் மதிப்பு!!!

உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாணய மதிப்பாக பிட்காயின் இருந்து வருகிறது. கண்களால் பார்க்கவோ, கையால் தொடவோ முடியாத இந்த நாணயத்தின் புழக்கம் சமீபகாலமாகத்தான்

இது முழுக்க முழுக்க பொய், யாரும் நம்ப வேண்டாம்: விஷ்ணுவிஷால் டுவீட்!

தான் நடிக்காத திரைப்படம் ஒன்றின் விளம்பரம் ஒன்று வந்து இருப்பதை பார்த்த விஷ்ணுவிஷால் கடும் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்த தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் இது முழுக்க முழுக்க பொய்