ஜிவி பிரகாஷின் மிகச்சிறந்த படம்: 'செல்பி' படம் குறித்து பிரபல அரசியல்வாதி கருத்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜிவி பிரகாஷ் நடித்த ‘செல்பி’ திரைப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் ஜீவி பிரகாஷின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
ஜிவி பிரகாஷ், கௌதம் மேனன் நடிப்பில் மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘செல்பி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறார்
இந்த நிலையில் இந்த படத்தை நேற்று பார்த்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது: நீட் தொடர்பான மோசடிகள், மாணவர்களின் தற்கொலைகள், கொலைகள் மற்றும் அநியாயமான கல்லூரி கட்டணம் ஆகியவற்றை அம்பலப்படுத்தும் துணிச்சலான படம் செல்பி. ஜி.வி.பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன், புதுமுகம் குணநிதி ஆகியோர் கலக்கியிருக்கிறார்கள். நான் பார்த்த ஜிவி பிரகாஷ் படங்களில் மிகச்சிறந்த படங்களில் ஒன்று ‘செல்பி. அனைவரும் காண வேண்டிய மிகச்சிறந்த படத்தை இயக்குனர் மதிமாறனுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.
One of GV Prakash’s best movies I have seen. Hats off to Director Mathimaran for giving us the must watch movie!!(2/2)#Selfie @MathiMaaran @DG_Gunanidhi
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) March 27, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments