பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர் ஞாநி காலமானார்.
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தமிழ் எழுத்தாளரும், பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ஞானிசங்கரன் இன்று அதிகாலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 64. கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த ஞாநிக்கு இன்று அதிகாலை 12.30 மணி அளவில் மூச்சித்திணறல் ஏற்பட்டதாகவும், அதன்பின்னர் ஒருசில நிமிடங்களில் அவரது உயிர் பிரிந்ததாகவும், அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது உடல் சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
1954ஆம் ஆண்டு செங்கல்பட்டில் ஞானி பிறந்தார். அவரது தந்தை வேம்புசாமியும் பத்திரிகை துறையில் பணிபுரிந்ததால், ஊடகத்தின் மீது பற்று ஏற்பட்டு பத்திரிகை துறைக்கு வந்தார். இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. கடந்த 2014-ல் ஆம் ஆத்மி கட்சி சார்பாக ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், பின்பு அக்கட்சியில் இருந்து விலகினார். எழுத்தாளர், விமர்சகர், இலக்கியவாதி என பல திறமைகள் கொண்ட ஞாநி, பரிட்ஷா என்ற பெயரில் நாடகக்குழுவையும் நடத்தி வந்தார். நடுநிலை அரசியல் விமர்சனங்களுக்கு புகழ் பெற்ற இவரது விமர்சனங்கள் பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வந்தது.
மறைந்த ஞாநிக்கு பத்மா என்ற மனைவியும் மனுஷ் நந்தன் என்ற மகனும் உள்ளனர். மனுஷ் நந்தன், கமல்ஹாசனின் 'மன்மதன் அம்பு', 'யான்' உட்பட ஒருசில திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments