பிரபல திரைக்கதை ஆசிரியர் - எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் எழுத்துலகில் புரட்சி செய்த எழுத்தாளர் பாலகுமாரன் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலம் இன்றி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் சிகிச்சையின் பலனின்றி சற்றுமுன்னர் காலமானார்.
கடந்த 1980ஆம் ஆண்டுகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாலகுமாரன், சுஜாதா நாவல்களை படிக்காமல் இருந்ததில்லை. அந்த அளவிற்கு அவர்களுடைய எழுத்தில் வலிமை இருந்தது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் சுஜாதா காலமான நிலையில் இன்று பாலகுமாரனும் காலமானார்
100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி உள்ள எழுத்தாளர் பாலகுமாரன், பாலசந்தர் இயக்கிய மூன்று படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். மேலும் 'இது நம்ம ஆளு' என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.
மேலும் நாயகன், குணா, ஜெண்டில்மேன், காதலன், பாட்ஷா, ஜீன்ஸ், முகவரி, சிட்டிசன் உள்பட பல படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். கலைமாமணி விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன் ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் உள்ளவர். யோகி ராம்சுரத்குமாரை தனது ஆன்மீக குருவாக ஏற்றுக்கொண்ட இவர் அவரை பற்றியும் பல நூல்கள் எழுதியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout