பிரபல திரைக்கதை ஆசிரியர் - எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்

  • IndiaGlitz, [Tuesday,May 15 2018]

தமிழ் எழுத்துலகில் புரட்சி செய்த எழுத்தாளர் பாலகுமாரன் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலம் இன்றி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் சிகிச்சையின் பலனின்றி சற்றுமுன்னர் காலமானார்.

கடந்த 1980ஆம் ஆண்டுகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாலகுமாரன், சுஜாதா நாவல்களை படிக்காமல் இருந்ததில்லை. அந்த அளவிற்கு அவர்களுடைய எழுத்தில் வலிமை இருந்தது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் சுஜாதா காலமான நிலையில் இன்று பாலகுமாரனும் காலமானார்

100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி உள்ள எழுத்தாளர் பாலகுமாரன், பாலசந்தர் இயக்கிய மூன்று படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். மேலும் 'இது நம்ம ஆளு' என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

மேலும் நாயகன், குணா, ஜெண்டில்மேன், காதலன், பாட்ஷா, ஜீன்ஸ், முகவரி, சிட்டிசன் உள்பட பல படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். கலைமாமணி விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன் ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் உள்ளவர். யோகி ராம்சுரத்குமாரை தனது ஆன்மீக குருவாக ஏற்றுக்கொண்ட இவர் அவரை பற்றியும் பல நூல்கள் எழுதியுள்ளார்.

More News

கர்நாடகாவில் வெற்றி, இனி காவிரி பிரச்சனை இல்லை; தமிழிசை செளந்திரராஜன்

தமிழகம், கர்நாடகம் இடையே பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் காவிரி பிரச்சனை இனி முடிவுக்கு வரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.

நாகர்கோயிலில் நந்திதாவின் 'நர்மதா' தொடக்கம்

'நர்மதா' என்ற படத்தில் நடிக்க நடிகை நந்திதா ஒப்பந்தமானார் என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

கதாநாயகி வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நடிகை

திரையுலகில் ஏற்கனவே நடிகைகள் பலர் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக அவ்வப்போது புகார்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்ட ஜூலி

பிக்பாஸ் ஜூலி சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு நானும் ஒரு கட்சி தொடங்க போகிறேன் என்றும் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தார்.

கர்நாடகா தேர்தல் முடிவு: தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு

கர்நாடக மாநிலத்தில் கடந்த 12ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.