விபத்தில் சிக்கி பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி மரணம்

  • IndiaGlitz, [Monday,May 07 2018]

திரைப்பட நடிகைகள், தொலைக்காட்சி தொடர் நடிகைகள் போலவே தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்களும் தற்போது பிரபலமாகி வருகின்றனர். அவர்களுக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டமும் உள்ளது

இந்த நிலையில் பிரபல மலையாள சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து பலரது பாராட்டுக்களை பெற்று வந்தவர் சூர்யா வாசன். இவர் சமீபத்தில் தனது இருசக்கர வாகனத்தில் பணிமுடிந்து வீட்டிற்கு திரும்பி வந்தபோது சாலை விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இவரது மறைவு மலையாள தொலைக்காட்சி நடிகர், நடிகைகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் சூர்யா வாசனின் தந்தை கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர்தான் காலமானார். அவரது மறைவின் சோகத்தில் இருந்தே இன்னும் அவரது குடும்பத்தினர் மீண்டு வராத நிலையில் தற்போது இவரும் மரணம் அடைந்துள்ளது அவரது குடும்பத்தினர்களை நிலைகுலைய செய்துள்ளது.