அஜித்தின் 'ஏகே 61' படத்தில் இந்த பிரபலமும் இணைகிறாரா?

  • IndiaGlitz, [Monday,July 18 2022]

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் ‘ஏகே 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தற்போது ஐரோப்பா நாடுகளில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் அஜித் விரைவில் இந்தியா திரும்பி விடுவார் என்றும் அதன்பின் ‘ஏகே 61’ படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புனேவில் நடைபெறும் ‘ஏகே 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் அஜித்துடன் மஞ்சுவாரியர் உள்பட படக்குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அஜய் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்துள்ள அஜய், ‘ஏகே 61’ படத்திலும் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் வில்லனாக ’சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்த ஜான் கொகைனா மற்றும் வீரா உள்பட ஒருசிலர் நடித்து வரும் நிலையில் தற்போது இந்தப் பட்டியலில் அஜய்யும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று முதலில் தகவல் வெளிவந்தாலும் தற்போது இந்த படம் டிசம்பரில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

ரூம் போட்டு யோசிப்பாங்களோ? அஜித் பட பாடல் வீடியோவை வெளியிட்ட சிம்ரன்!

ரூம் போட்டு யோசிப்பாங்களோ என நடிகை சிம்ரன் பதிவு செய்துள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலா வருகிறது.

வரலட்சுமிக்கு கொரோனாவா? இந்த வீடியோவை பார்த்தா யாரும் நம்ப மாட்டாங்க!

நடிகை வரலட்சுமி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்தால் அவருக்கு கொரோனா பாதிப்பு

'யானை' வெற்றியை அடுத்து அஜித், விஜய் இயக்குனருடன் இணையும் அருண்விஜய்!

அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான 'யானை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அருண் விஜய் மார்க்கெட் கோலிவுட்டில் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யின் ராசியான நடிகை வில்லியா? 'தளபதி 67ல் லோகேஷின் திட்டம் தான் என்ன?

விஜய்யின் ராசியான  நடிகை என்று கூறப்படும் பிரபல நடிகை 'தளபதி 67' படத்தில் வில்லியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் லோகேஷ் கனகராஜ் திட்டம்தான் என்ன? என்ற கேள்வி

திருமணம், பார்ட்டிக்கு சென்றாலும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் திரையுலக பிரபலங்கள்!

திரையுலகில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பிரபலங்கள் திருமணம் மற்றும் பார்ட்டிக்கு சென்று நடனமாடுவதற்கும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன