பிரபல எழுத்தாளர் மகரிஷி காலமானார்: ரஜினி படமாக மாறிய இவரது நாவல்
- IndiaGlitz, [Saturday,September 28 2019]
பிரபல தமிழ் எழுத்தாளர் மகரிஷி சேலத்தில் உடல்நலக்குறைவால் காலமானர். அவருக்கு வயது 87.
எழுத்தாளர் மகரிஷி 130 புதினங்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60 கட்டுரை நூல்களை எழுதியுள்ளார். தஞ்சாவூரில் பிறந்த பாலசுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட மகரிஷி மின்வாரியத்தில் பணியாற்றியவர். தமிழ் மேல் உள்ள காதலால் எழுத்தாளராக மாறினார்.
இவர் எழுதிய நாவல்களில் ஒன்றுதான் ரஜினிகாந்த், சிவகுமார் நடித்த ‘புவனா ஒரு கேள்விக்குறி’ என்ற திரைப்படமாக மாறியது. மேலும் இவரது நாவல்கள் ’என்னதான் முடிவு’, ‘பத்ரகாளி, ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’, ‘வட்டத்துக்குள் சதுரம்’, ’நதியை தேடி வந்த கடல்’ ஆகிய திரைப்படங்களாக மாறியுள்ளது.
மகரிஷின் மறைவிற்கும் திரையுலகினர்களும், எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.