ஹீரோவாகும் இன்னொரு பிரபல தமிழ் இயக்குனர்: டீசர் ரிலீஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் பலர் ஹீரோவாக நடித்து உள்ளனர் என்பதும், குறிப்பாக பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, சசிகுமார், சேரன், கேஎஸ் ரவிக்குமார், சுந்தர் சி உள்பட பல இயக்குனர்கள் பின்னாளில் ஹீரோவாகவும் வெற்றிகரமாக திரையுலகில் வலம் வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் ’பானா காத்தாடி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் ’செம போத ஆகாதே’ ’பிளான் பண்ணி பண்ணனும்’ ஆகிய படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் டைட்டில் இன்னும் வைக்கப்படாத நிலையில் இந்த படத்தின் டீஸர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள மூன்று நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த படத்தின் டீசர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது . இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதோடு இந்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Souls seldom die nor lie! Announcing @dirbadri 's next #BadriVenkatesh4 with a teaser shot before the actual shoot! Badri Venkatesh directs and acts in this psychological horror along with a plethora of actors.Music is by @simonkking @donechannel1https://t.co/ChwHWp7B1H pic.twitter.com/RdcOodUwcO
— shruti haasan (@shrutihaasan) January 12, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com