'ஜெயிலர்' திரைப்படத்தில் இணைந்த தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தில் இணையும் நட்சத்திரங்களின் தகவல்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர்கள் இணைந்தனர் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகை தமன்னா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமன்னாவுக்கு இந்த படத்தில் என்ன கேரக்டர்? ரஜினிக்கு என்ன உறவாக அவர் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகிபாபு, வசந்த் ரவி, அறந்தாங்கி நிஷா, பருத்திவீரன் சரவணன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.
.@tamannaahspeaks from the sets of #Jailer
— Sun Pictures (@sunpictures) January 19, 2023
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/sKxGbQcfXL
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments