ஏ.ஆர்.ரஹ்மானின் ஹிட் பாடலை பாடிய பிரபல பாடகி 46 வயதில் மறைவு: திரையுலகினர் இரங்கல்

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் கம்போஸ் செய்த ஹிட் பாடலை பாடிய பிரபல பாடகி 46 வயதில் காலமானதால் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் 200 பாடல்களுக்கு மேல் பாடிய பாடகி சங்கீதா சஜித். பிரபுதேவா நடித்த ‘மிஸ்டர் ரோமியோ’ என்ற திரைப்படத்தில் சூப்பர் ஹிட்டான ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த ’தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை’ என்ற பாடலை பாடியது இவர்தான்.

’மிஸ்டர் ரோமியோ’ மட்டுமின்றி ’தலைநகரம்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தென்னிந்திய படங்களிலும் பாடியுள்ளார். பிரித்திவிராஜ் நடித்த ’அய்யப்பனும் கோஷியும்’ என்ற படத்தில் இவர் பாடிய பாடல்தான் இவருடைய கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது .

46 வயதான பாடகி சங்கீதா சுஜித் சிறுநீரக பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது ஆத்மா சாந்தி அடைய திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.