பிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்ட முன்னணி ஆர்ஜே: பரபரப்பு தகவல்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் அக்டோபர் 4ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தேர்வு செய்யப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் சென்னையில் உள்ள ஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் புகைப்படத்துடன் கூடிய செய்திகள் வெளியானது குறித்து ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் பிரபல ஆர்ஜே அர்ச்சனா கலந்துகொள்ள இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவரும் அதே ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2002ஆம் ஆண்டு சன் டிவியில் காமெடி டைம் என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழ் பெற்ற அர்ச்சனா அதன்பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கலக்க போவது யாரு, நம்ம வீட்டு கல்யாணம், சரிகமப, சூப்பர் மாம், உள்பட பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் ஒருசில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பதும், இவர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்திற்கு இவர் டப்பிங் செய்தது குறித்த செய்தியை பார்த்தோம்.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகைகள் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, ஷாலு ஷம்மு, ஆகியோர்களும், பாடகர் வேல்முருகன், விஜய் டிவி பிரபலங்களான ஆஜித், கேப்ரில்லா ஆகியோர்களும் நடிகர் அனுமோகன் உள்பட ஒரு சிலரும் கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியானது. தற்போது அந்த வரிசையில் ஆர்ஜே அர்ச்சனாவும் உறுதி செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள்: லீக் ஆன புகைப்படங்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் கடந்த ஒரு மாதமாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்த நிலையில்

விஜிபி சிலை மனிதன் குறித்த வதந்தி: அவரே அளித்த விளக்கம்

சென்னை விஜிபி கடற்கரையான கோல்டன் கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் முதன் முதலில் பார்ப்பது வாயில் அருகே உள்ள அசையாமல் நிற்கும் நபரைத்தான் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தியக் காலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழகத்திற்குச் சிறப்பிடம் வேண்டும்… கோரிக்கை வைத்த தமிழக முதல்வர்!!!

சமீபத்தில் இந்திய கலாச்சாரத்தை ஆராய்வதற்காக 14 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்தது.

ஊரேகூடி நிச்சயித்த திருமணத்தை தைரியமாகத் தடுத்து நிறுத்திய 13 வயது சிறுமி… பரபரப்பு சம்பவம்!!!

கொரோனா ஊரடங்கால் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன.

கொரோனாவால் வேலை இழந்து வாடிய இளைஞருக்கு அடித்தது லாட்டரி… சுவாரசியத் தகவல்!!!

கேரளாவில் கொரோனாவால் வேலையிழந்த ஒரு இளைஞருக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பரிசுத்தொகை கிடைத்து இருக்கிறது