பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் காலமானார்

  • IndiaGlitz, [Saturday,December 30 2017]

தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் பல திரைப்படங்களை தயாரித்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் அவர்கள் இன்று (30/12/2017) காலை இறைவனடி சேர்ந்தார். அவருக்கு வயது 60

தென்னிந்திய திரையுலகில் இருந்து சென்று Indian Summer, Blood Stone, Tropical heat, Inferno, Jungle boy, Provoked போன்ற பல ஹாலிவுட் படங்களைத் தயாரித்தவர். இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முறையாக நடித்த ஆங்கில படமான Blood Stone, ஐஸ்வர்யா ராய் நடித்த ஹாலிவுட் படமான Provoked ஆகிய வெற்றிப்படங்ளை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தவிர தமிழில் வெளிவந்த ஜீன்ஸ், மின்னலே, தாம்தூம், ஆகிய திரைப்படங்களில் இணை தயாரிப்பாளராகவும் இருந்தவர். மேலும் மாதவன் நடித்த 'ராம்ஜி லண்டன் வாலே' என்ற படத்தையும் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

மறைந்த சுனந்தாவின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய அனைவரும் ஆண்டவனை பிரார்த்தனை செய்வோம்.

More News

காத்தோம் ஜல்லிக்கட்டை ! காப்போம் கலாச்சாரத்தை !

மேற்கத்திய கலச்சாரத்தின் ஆதிக்கம் உள்ள இந்த காலத்தில் தமிழர்களின் பாரம்பரிய வேட்டி சட்டைகளுக்கு எதிரான...

சிரஞ்சீவிக்கு வலது கரமாக மாறும் விஜய்சேதுபதி

சிரஞ்சீவி, சயீரா நரசிம்மா ரெட்டி என்ற டைட்டில் கேரக்டரில் நடித்து வரும் நிலையில் அவருக்கு வலது கரமாக படம் முழுவதும் வலம் வரும் 'ஒப்பாயா' என்ற கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்கின்றாராம்.

என் ஆணுறை விளம்பரத்தை பார்த்து அரசு ஏன் பயப்படுகிறது? பிரபல நடிகை கேள்வி

நான் நடித்த ஆணுறை விளம்பரம் பிரபலமான போது மட்டும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆணுறை விளம்பரத்தை ஒளிபரப்ப அரசு தடை விதித்துள்ளது.

கடைசி விவசாயிக்கு கை கொடுக்கின்றாரா ரஜினிகாந்த்?

'காக்கா முட்டை' என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய இயக்குனர் மணிகண்டன், இரண்டாவதாக இயக்கிய 'ஆண்டவன் கட்டளை' படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியா? ஹர்திக் பட்டேல் அதிரடியால் பரபரப்பு

சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி 80 தொகுதிகளிலும்வெற்றி பெற்றனர்.