இந்த உலகமே பொறாமையுடன் பார்க்கும் திறமைசாலி: கமல் குறித்து சொன்ன பிரபல தயாரிப்பாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த உலகமே பொறாமையுடன் பார்த்த திறமைசாலிகள் சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் என பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்யும் என்றும், விஸ்வரூபம் படத்திற்கு அடுத்ததாக கமல்ஹாசனின் மிக அதிக வசூல் செய்யும் படம் அநேகமாக ’விக்ரம்’ படமாகத்தான் இருக்கும் என்றும் டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் கமல்ஹாசனின் நடிப்பு, லோகேஷ் கனகராஜின் இயக்கம் மற்றும் திரைக்கதை, அனிருத்தின் பின்னணி இசைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் சிம்பு நடித்த ’மாநாடு’ உள்பட பல திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை பார்த்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
உலகம் பொறாமையுடன் திரும்பிப் பார்க்கும் திறமைசாலிகளைத் தமிழ்த் திரையுலகம் கொண்டிருப்பது நாமெல்லாம் பெருமைகொள்ளலாம்.
எப்போதும், ஐயா சிவாஜி, இப்போது உலக நாயகன். உலகின் தலைசிறந்த கலைஞர்களில் முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள். அப்படி அமர்ந்திருப்பதற்கு காரணம் "அர்ப்பணிப்பு" என்ற பெரும் உழைப்பைக் கையில் வைத்திருந்ததால்தான்.
இத்தனை ஆண்டுகள் கடந்தும் தன்னை அர்ப்பணிக்கும் உணர்வை விட்டுத் தரவில்லை உலக நாயகன் கமல்ஹாசன். தன்னை இந்த சினிமாவில் தனித்துவப் படுத்திக் கொண்டே இருக்கிறார். விக்ரம் படத்திலும் அவரது தனித்துவம் மின்னுகிறது.
பெருமைகொள்ள வைக்கும் நாயகனின் விக்ரம் பல மைல் கல்களைத் தாண்டி மக்களை மகிழ்விக்கும். ஒரு இரசிகனாக வாழ்த்தி மகிழ்கிறேன். படம் பார்க்காதவர்கள் திரையரங்கம் வந்து பாருங்கள். வாழ்த்துக்கள் லோகேஷ் கனகராஜ்’ என தெரிவித்துள்ளார்.
உலகம் பொறாமையுடன் திரும்பிப் பார்க்கும் திறமைசாலிகளைத் தமிழ்த் திரையுலகம் கொண்டிருப்பது நாமெல்லாம் பெருமைகொள்ளலாம்.
— sureshkamatchi (@sureshkamatchi) June 5, 2022
எப்போதும், ஐயா சிவாஜி, இப்போது உலக நாயகன். உலகின் தலைசிறந்த கலைஞர்களில் முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள். 1/2
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout