மனைவியை விவகாரத்து செய்தார் பிரபல தமிழ் இசையமைப்பாளர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Wednesday,December 29 2021]

பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் தனது மனைவியை விவாகரத்து செய்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’ உள்பட பல வெற்றிப் படங்களுக்கு இசை அமைத்தவர் இசையமைப்பாளர் டி இமான். இவர் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: என்னுடைய நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கை என்பது பல்வேறு பாதைகளை கொண்டது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். நானும் எனது மனைவி மோனிகா ரிச்சர்ட் அவர்களும் சட்டபூர்வமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். நாங்கள் இருவரும் இனிமேல் கணவன் மனைவி அல்ல.

இது குறித்து எனது நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் எங்களது தனிப்பட்ட இந்த முடிவுக்கு மதிப்பளித்து எங்களது அடுத்தகட்ட வாழ்விற்கு செல்லும் வகையில் ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் டி இமான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.