மைலாப்பூர் ஜன்னல் கடை பஜ்ஜி உரிமையாளர் கொரோனாவுக்கு பலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அல்வா பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் தற்போது சென்னை மைலாப்பூர் பகுதியில் பஜ்ஜிக்கு பெயர் போன ஜன்னல் கடை பஜ்ஜி கடையின் உரிமையாளர் ரமேஷ் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார் என்ற செய்தி பஜ்ஜி பிரியர்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
சென்னை மயிலாப்பூரின் அடையாளமாகத் திகழ்ந்த ஜன்னல் கடை உரிமையாளர் ரமேஷ் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சையின் பலனின்றி பலியானதாக தகவல் வந்துள்ளது. மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே ஒரு சின்ன ஜன்னலில் ரமேஷ் பஜ்ஜி கடை நடத்தி வந்தார். இந்த கடையில் எப்போதும் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதும்.
மைலாப்பூர் கோவிலுக்கு வருபவர்கள் இந்த கடையின் பஜ்ஜி, போண்டாவை சுவைக்காமல் செல்வதில்லை. ஜன்னலில் இருந்து அவர் பஜ்ஜியை விற்று வந்ததால் “ஜன்னல் கடை” என்று பெயர் வந்தது. இந்த கடையை விரிவுபடுத்தும் வகையில் வசதி வந்தபோதும், கடையின் அடையாளத்தை மாற்றக்கூடாது என்று அவர் தொடர்ந்து ஜன்னலிலேயே வியாபாரத்தை செய்து வந்தார்.
சுமார் 30 ஆண்டுகளாக பஜ்ஜி கடையை நடத்தி வந்த ரமேஷ் கொரோனாவால் உயிரிழந்தார் என்ற செய்தி மைலாப்பூர் மக்களை மட்டுமின்றி சென்னை மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout