பிரசன்னா படத்துல நான் குழந்தையா நடிச்சிருக்கேன்: பிரபல ஹீரோயின்

  • IndiaGlitz, [Tuesday,June 14 2022]

17 வருடங்களுக்கு முன் பிரசன்னா நடித்த படத்தில் நான் குழந்தையா நடித்திருக்கிறேன் என்று பிரபல நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ‘பிங்கர் டிப்’ என்ற வெப்தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் 17ஆம் தேதி ஜீ5 தொலைக்காட்சியில் பிங்கர் டிப் வெப்தொடரின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிலையில் ’பிங்கர் டிப்’ சீசன்2 வெப்தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரெஜினா, ‘பிங்கர் டிப்’ வெப்தொடரின் படப்பிடிப்புகளில் கிடைத்த அனுபவங்கள் குறித்து கூறினார். மேலும் இந்த தொடரில் பிரசன்னா காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில் அவருடன் 17 வருடங்களுக்கு முன் தான் குழந்தையாக நடித்திருப்பதாக அவர் கூறியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியூள்ளது.

பிரசாந்த், லைலா நடித்த ’கண்ட நாள் முதல்’ என்ற திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் நாயகி லைலாவின் சகோதரியாக ரெஜினா நடித்து இருந்தார் என்பதும் அப்போது ரெஜினாவுக்கு வயது 14 என்பதும் குறிப்பிடத்தக்கது. 17 வருடங்களுக்குப் பின்னர் தற்போது மீண்டும் பிரசன்னாவுடன் நடிப்பது தனக்கு மிகுந்த சந்தோஷம் என்றும் ரெஜினா தெரிவித்தார்.

More News

இனிமேல் இப்படித்தான்: 2 கண்டிஷன்களை போட்டாரா நயன்தாரா?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 9ஆம் தேதி திருமணம் செய்த நிலையில் தற்போது அவர் கொச்சியில் அவரது அம்மா வீட்டில் இருக்கிறார்

உயிரிழந்த ரசிகரின் குடும்பத்திற்கு உறுதிமொழி கொடுத்த ஜெயம்ரவி!

ஜெயம் ரவியின் தீவிர ரசிகர் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய ஜெயம் ரவி அவரது குடும்பத்திற்கு ஒரு உறுதிமொழி கொடுத்து உள்ளதாக தகவல்

ஒரே நாளில் தனுஷ்-சிம்பு படங்கள் ரிலீசா?

தமிழ் திரையுலகை பொறுத்தவரை ஒரே நாளில் மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆனால் அந்தந்த ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பது தெரிந்ததே. ரஜினி - கமல், அஜித் - விஜய் ஆகியோரின்

கமல்ஹாசனை சந்தித்த 'குக் வித் கோமாளி' அஸ்வின்: என்ன காரணம் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்த மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 'விக்ரம்' வெற்றியை அடுத்து

சுந்தர் சியின் 'பட்டாம்பூச்சி' ரிலீஸ் தேதி: 9 படங்களுடன் ரிலீஸ் ஆகிறதா?

சுந்தர் சி நடித்த 'பட்டாம்பூச்சி' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.