பிரபாஸ் படத்தில் நடிக்க ஒரே ஒரு கண்டிஷன் போட்ட முன்னணி ஹீரோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபாஸ் படத்தில் நடிக்க ஒரே ஒரு கண்டிஷன் முன்னணி ஹீரோ போட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் வெளியான ’கேஜிஎப் 2’ என்ற திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’கேஜிஎப் 2’ படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வரும் திரைப்படம் ‘சலார்’ என்பதும் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடித்து வரும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள ஹீரோ பிரித்திவிராஜ் இணைந்துள்ளார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இணைந்தது குறித்து பிரித்திவிராஜ் கூறியபோது ‘பிரபாஸ் படம் என்பதால் அந்த படத்தில் நடிக்க நோ சொல்ல முடியாது என்றும் மொழிகளை கடந்து இந்திய சினிமா என்ற ஒற்றுமையில் மற்ற மொழி நடிகர்கள் பிற மொழி படங்களில் வில்லனாகவும் துணை நடிகராக நடித்து வரும் நிலையில் என்னாலும் இந்த படத்தை ஒதுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்
மேலும் இந்த படத்தில் நடிக்க நான் இயக்குனரிடம் ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட்டேன் என்றும், அந்த கண்டிஷன் என்னவெனில் இந்த படம் எத்தனை மொழிகளில் வெளியிட்டாலும் அத்தனை மொழிகளிலும் நான்தான் சொந்த குரலில் பேசி நடிப்பேன் என்றும் சுமாராக இருந்தாலும் நான்தான் டப்பிங் பேசுவேன் என்றும் கூறினேன் என்று கூறினார். அதற்கு பிரசாந்த் நீல் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.
I would Love to do that Film, it's a #Prabhas Film, there isn't any thing to say no to it right, It's a Big.. Big Film.?? - @PrithviOfficial #Salaar pic.twitter.com/HPCCf35BGC
— . (@charanvicky_) June 26, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments