பிரபல இயக்குனர் விசு காலமானார்!

  • IndiaGlitz, [Sunday,March 22 2020]

பிரபல தமிழ் இயக்குனர் விசு உடல்நலக்குறைவால் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 74.

விசுவின் மரணத்தை அடுத்து திரையுலக பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எஸ்பி முத்துராமன் இயக்கிய ’குடும்பம் ஒரு கதம்பம்’ என்ற படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் விசு, அதன்பின்னர் மணல்கயிறு, நாணயம் இல்லாத நாணயம், திருமதி ஒரு வெகுமதி, அவள் சுமங்கலிதான், சிதம்பர ரகசியம் உள்பட பல படங்களை இயக்கினார். மேலும் பல படங்களில் நடிகராகவும் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் குறைவால் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் விசு, சற்று முன்னர் சிகிச்சை பலனின்றி காலமானார். குடும்ப பாங்கான படங்களை இயக்கி வந்த இயக்குனர் விசுவின் மறைவால் தமிழ் திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

More News

மொத்த நாடும் ஒரே நேரத்தில் கைதட்டியது: கொரோனாவை விரட்ட இந்த ஒற்றுமை போதும்

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை தன்னலம் கருதாது காப்பாற்றும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு

சென்னை உள்பட நகரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு: மத்திய சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, இந்தியா முழுவதும் 75 மாவட்டங்களை மார்ச் 31ஆம்  தேதி வரை முடக்க மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

வீடியோ நீக்கம் குறித்து ரஜினிகாந்த் விளக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று பதிவு செய்த வீடியோ உடன் கூடிய டுவீட்டை டுவிட்டர் இந்தியா நீக்கிய நிலையில் இதுகுறித்து ரஜினிகாந்த் தற்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் எதிரொலி: மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மின் கணக்கீடு எடுக்கப்பட்ட வீடுகளுக்கு புது கட்டணமும், கணக்கீடு எடுக்கப்படாத வீடுகளுக்கு முந்தைய மாத கட்டணமும் வசூலிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது

இன்று ஒரே நாளில் மூவர் பலி: இந்தியாவில் கொரோனாவால் அதிகரிக்கும் மரணங்கள்

கொரோனா வைரசால் இந்தியாவில் நேற்று வரை நான்கு பேர் மட்டுமே உயிரிழந்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது