பிரபல இயக்குனரின் அடுத்த படம் ஓடிடி ரிலீஸா? ரசிகர்கள் அதிருப்தி

தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு அனைத்து படங்களும் திரையரங்குகளில் வெளியாகி வரும் நிலையில் ஒருசில படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஆனால் பிரபல நடிகர்கள் மற்றும் பிரபல இயக்குனர்களின் படங்கள் அனைத்துமே தற்போது திரையரங்குகளில் ரிலீசாகி அதன்பின்னர் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ’விடுதலை’ படம் ஓடிடியில் நேரடியாக ரிலீசாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த படத்திற்காக இரண்டு வருடம் சூரி தனது உழைப்பை கொட்டி உள்ளார் என்பதும் அவரை பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில் திடீரென இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் முதல் பாகத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நிலையில் கௌதம் மேனன் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் இரண்டாம் பாகத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.