21 வருடங்களுக்கு முன் நான் பார்த்த அதே விஜய்; 'தளபதி 67' படத்தில் இணைந்த பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்துவரும் ’தளபதி 67’ படத்தில் நடிக்க இருக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
கடந்த மூன்று மணி நேரத்தில் சஞ்சய்தத், பிரியா ஆனந்த் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சற்றுமுன் இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் இணைந்தது குறித்து மிஷ்கின் கூறிய போது ’21 வருடங்களுக்கு முன் நான் விஜய் படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்தேன். இத்தனை ஆண்டுகளாக மாறாத ஒன்று நாங்கள் இருவரும் பகிர்ந்து கொள்ளும் பந்தம் தான். லோகேஷ் மற்றும் எனக்கும் இருக்கும் பரஸ்பர அன்பு மற்றும் மரியாதை காரணமாக இந்த படத்தில் என்னை நடிக்க உற்சாகப்படுத்தியது. ’தளபதி 67’ படத்தை உங்களுடன் நானும் திரையரங்குகளில் காண மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
அனிருத் இசையில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை லலித் மற்றும் ஜெகதீஷ் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர்.
Yes, it’s official now!
— Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023
We are happy to announce Director #Mysskin sir is part of #Thalapathy67 🔥#Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/Zn44BqkN5N
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments