சிம்புவுடன் ஜோடி சேரும் பிரம்மாண்ட இயக்குனரின் மகள்?

சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஒருவரின் மகள் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ‘பத்து தல’ மற்றும் ‘கொரோனா குமார்’ ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்பு நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கொரோனா குமார்’ படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அதிதிஷங்கர் தற்போது கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் ’விருமன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்புவின் அடுத்த படத்தில அதிதிஷங்கர் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


 

More News

முடிவுக்கு வந்தது பா ரஞ்சித்தின் அடுத்த படம்: ரிலீஸ் எப்போது?

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய 'சார்பாட்டா பரம்பரை' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. 

நயன்தாராவின் அடுத்த படமும் ஓடிடி ரிலீஸா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' மற்றும் 'நெற்றிக்கண்' ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் அவரது அடுத்த படமும் ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

மீண்டும் மாறுகிறதா சிவகார்த்திகேயனின் 'டான்' ரிலீஸ் தேதி?

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் சிவகார்த்திகேயனின் முதல் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற பெருமையை

தூங்கும்போது கூட கயிற்றை பிடித்திருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்: என்ன ஆச்சு?

தூங்கும் போது கூட பிக்பாஸ் போட்டியாளர்கள் கயிற்றை பிடித்திருக்கும் காட்சி இன்றைய முதல் புரோமோ வீடியோவில் உள்ளன. 

'தளபதி 66' படத்திற்காக செந்தில்-ராஜலட்சுமி பாடல் பாடியது உண்மையா? 

விஜய் நடித்து முடித்துள்ள 65வது திரைப்படமான 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்க உள்ளன. இந்த நிலையில் தளபதி விஜய்யின்