சின்மயி 'மீ டூ' லிஸ்ட்டில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்

  • IndiaGlitz, [Thursday,October 11 2018]

பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியதை அடுத்து அவரை போலவே தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகள் குறித்த தகவல்களை சில பெண்கள் தைரியமாக கூறி வருகின்றனர். இந்த தகவல்களையும் சின்மயி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார். அந்த வகையில் தற்போது ஒரு பெண், பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர் ஒருவர் மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டை சின்மயி பகிர்ந்துள்ளார். அந்த பெண் கூறியதாவது:

சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் எனது தோழி தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றென். அப்போது இலங்கை கிரிக்கெட் வீரர் தனது தோழி அவருடைய அறையில் இருப்பதாக கூறி என்னை அழைத்து சென்றார். அறைக்குள் சென்றவுடன் என்னை படுக்கையில் தள்ளி என் அருகே வர முயற்சித்தார். அவர் நல்ல உயரம், எடையுடன் இருந்ததால் அவரை என்னால் எதிர்க்க முடியவில்லை. அந்த நேரத்தில் ஓட்டல் ஊழியர் ஒருவர் கதவை தட்டினார். அவர் கதவை திறந்தவுடன் நான் வெளியே ஓடிவிட்டேன்,

அந்த நேரத்தில் நான் இதனை வெளியே கூறியிருந்தால் அவர் பிரபலமானவர் என்பதால் நான் தான் விரும்பி அவருடைய அறைக்கு சென்றதாக கூறிவிடுவார்கள் என்று பயந்தேன் என்று ஒரு பெண் கூறியுள்ளார். இந்த பெண்ணுக்கு நடந்த இந்த சம்பவத்தை சின்மயி பகிர்ந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.