ஏற்கனவே இந்தியாவில் அதிக மக்கள் தொகை உள்ளது: கர்ப்பமா? என்ற கேள்விக்கு பதிலளித்த பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Monday,August 01 2022]

பிரபல நடிகை ஒருவர் கர்ப்பமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அந்த நடிகை, ‘ஏற்கனவே இந்தியாவில் அதிக மக்கள்தொகை இருப்பதாக எனது கணவர் கூறியுள்ளார்’ என்று தெரிவித்தார்.

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக அவர் கர்ப்பமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வைரலானது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இங்கிலாந்து மற்றும் இத்தாலி சுற்றுப்பயணம் முடித்துவிட்டு இந்தியா திரும்பிய கரீனா கபூரிடம்செய்தியாளர்கள் நீங்கள் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியானதே என கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு பதில் அளித்த அவர் ’நான் கர்ப்பமாக இல்லை, நம் நாட்டில் ஏற்கனவே மக்கள் தொகை அளவுக்கு அதிகமாக இருப்பதாக எனது கணவர் கூறியுள்ளார். நான் மீண்டும் கர்ப்பம் அடைய வேண்டுமா என்பதையும், எனக்கு இன்னொரு குழந்தை தேவையா என்பதையும் என்னிடமே விட்டுவிடுங்கள். நான் என்ன இயந்திரமா? என்று கேள்வி பதில் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.