தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைக்கு கொரோனா பாதிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,January 11 2022]

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன், வடிவேலு, சத்யராஜ், ஷோபனா, ஷெரின், ரைசா வில்சன் உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர் என்பதும் அவர்களில் சிலர் குணமாகி டிஸ்சார்ஜ் பெற்று விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார். தனக்கு லேசான கொரோனா பாதிப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு பாதுகாப்பாக இருக்கவும் என்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் அறிவுறுத்தியுள்ளார்.