'துணிவு' படத்தில் பாடல் பாடிய பிரபல நடிகை.. அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ’துணிவு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கிட்டத்தட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் இந்த படம் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் வெளிநாட்டில் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனமும் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனமும் பெற்றுள்ளது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தில் 3 பாடல் இடம்பெற்று உள்ளதாகவும் அதில் ஒரு பாடலை அனிருத் பாடி உள்ளதாகவும் ’சில்லா சில்லா’ பாடல் என்ற இந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளியாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் நடிகை மஞ்சுவாரியார் ஒரு பாடலை பாடி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மஞ்சுவாரியர் தனது சமூக வலைத்தளத்தில் ஜிப்ரான் இசையில் ’துணிவு’ படத்தில் ஒரு பாடலை பாடியது தனக்கு திரில்லிங் அனுபவமாக இருந்தது என்றும் இந்த பாடலை கேட்க அனைவரும் தயாராக இருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜிப்ரானுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் நடிகை மஞ்சுவாரியர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ’துணிவு’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள மஞ்சுவாரியர் இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடி உள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித், மஞ்சுவாரியர், வீரா, ஜான் கொகைன் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Thrilled to have sung for @GhibranOfficial !!! Happy to be part of a very interesting song in #Thunivu! Waiting for you all to hear it! ❤️#ajithkumar #AK #hvinoth pic.twitter.com/G934UX79sg
— Manju Warrier (@ManjuWarrier4) November 26, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com