ஜெயம் ரவி - கீர்த்தி சுரேஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை: அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,September 05 2022]

ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் இன்னொரு பிரபல நடிகை இணைந்துள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடிக்கும் 36 ஆவது படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் ’சைரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஆண்டனி பாக்கியராஜ் என்ற அறிமுக இயக்குனர் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஜிவி பிரகாஷின் இசையில் செல்வகுமார் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அனுபமா பரமேஸ்வரனின் கேரக்டர் இந்த படத்தின் கதைக்கு மிகவும் முக்கியத்துவமானது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.