ரஜினியின் தங்கையாக பிரபல நடிகரின் மனைவி நடிக்கின்றாரா? 25 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழில் ரீஎண்ட்ரி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இருக்கும் அடுத்த திரைப்படமான ’லால் சலாம்’ திரைப்படத்தில் தெலுங்கு பிரபல நடிகரின் மனைவி நடிக்க இருப்பதாகவும், 25 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தமிழ் திரையுலகில் அவர் ரீஎண்ட்ரி ஆக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ’லால் சலாம்’. இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைக்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் தற்போது பிரபல தமிழ் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மனைவியும் நடிகையுமான ஜீவிதா இருப்பதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு ’வளைகாப்பு’ என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் ரீஎண்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் 7ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் முதல்கட்ட படப்பிடிப்பிலேயே ரஜினியுடன் ஜீவிதா படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை ஜீவிதா ரஜினியின் தங்கையை கேரக்டரில் நடிப்பதாகவும், அவரது கேரக்டர் இந்த படத்தின் கதைக்கு திருப்பமுனையை ஏற்படுத்தும் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments