இந்த புகைப்படத்தில் மூன்று பிரபல நடிகர்கள் உள்ளனர்: யார் யார் என கண்டுபிடியுங்கள் பார்ப்போம்?

  • IndiaGlitz, [Monday,May 24 2021]

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 24ஆம் தேதி சகோதரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த தினத்தின் போது சகோதரர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருவார்கள்

குறிப்பாக திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சகோதரர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆகிய சிரஞ்சீவி தனது சகோதரர்களாகிய நாகேந்திர பாபு மற்றும் பவன் கல்யாண் ஆகியோருடன் சிறு வயதில் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். சிறுவயதில் அடையாளமே தெரியாத தெரியாதவாறு இருக்கும் சிரஞ்சீவியும் அவரது சகோதரர்களாகிய நாகேந்திர பாபு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர்களின் இந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது