விவாகரத்து ஆனாலும் முன்னாள் மனைவிகளை வாரம் வாரம் பார்ப்பேன்: பிரபல நடிகர் பேட்டி

பிரபல நடிகர் ஒருவர் தான் விவாகரத்து செய்த இரண்டு மனைவிகளை ஒவ்வொரு வாரமும் சென்று பார்ப்பேன் என்று கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் நடிகைகள் தங்கள் துணையை பிரிந்து விவாகரத்து செய்துவிட்டால் இருவரும் நேருக்கு நேர் பார்ப்பதையே தவிர்த்து வருவதாக கூறப்படும் நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர் கான், தான் விவாகரத்து செய்த இரண்டு மனைவிகளை ஒவ்வொரு வாரமும் சென்று பார்த்து விடுவேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண்ஜோஹர் நடத்திவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஆமிர்கான் கலந்து கொண்டார். இதில் அவர் தனது முன்னாள் மனைவிகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது, ‘நான் என் முன்னால் மனைவிகளை மதிக்கின்றேன் என்றும் அவர்களுடன் நட்புடன் இருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் நாங்கள் எப்போதும் ஒரு குடும்பம் தான் என்றும் ஒரு வாரத்துக்கு ஒருமுறை அவர்களை சந்தித்து விடுவேன் என்றும் அவ்வளவு பிஸியாக இருந்தாலும் மனைவிகளை சந்திப்பதில் இருந்து தவற மாட்டேன் என்றும் எங்களிடையே அன்பு பாசம் மரியாதை எப்போதும் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

நடிகர் ஆமீர்கான் முதலில் ரீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து, 16 ஆண்டுகள் கழித்து அவரை விவாகரத்து செய்தார். அதன்பின் இயக்குனர் கிரண் என்பவரை திருமணம் செய்த ஆமீர்கான், அவருடன் பதினைந்து ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு கடந்த ஆண்டு தான் பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.